மதுவினால் தொடரும் உயிர் பலி.. மது மயக்கத்தில் கண் முன்னே மகனை பறிகொடுத்த தந்தை..

மதுரையை அடுத்த பெருங்குடி அருகே உள்ள ஐ நேந்தல் கண்மாயில்  பிரமோத் என்ற ஒன்பது வயது சிறுவன் கண்மாயில் மூழ்கி இறந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஐநேந்தல் பகுதியை சார்ந்தவர் விருமாண்டி, அவர் தன் மகனுடன் அருகில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றுள்ளார்.  அச்சமயத்தில் விருமாண்டி குடிபோதையில் இருந்துள்ளார். அப்பொழுது குளிக்க சென்ற சிறுவன் ஆரமான இடத்திற்கு சென்று தத்தளித்துள்ளான். ஆனால் விருமாண்டி போதையில் நிலை இல்லாமல் இருந்ததால் அவரால் கண்மாயில் இறங்கி காப்பாற்ற இயலாமல், அவர் கண் முன்பே சிறுவன் நீரில் மூழ்கி இறந்துள்ளான்.

பின்னர் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து மதுரை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பெருங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குடிபோதையால் தனது 9 வயது மகனை இழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered