கனத்த இதயத்துடனும்.. மன வலிமையையும் கொடுத்து கடந்து செல்லும் “ஈகை திருநாள்”…

இஸ்லாமியர்களின் அனுமதிக்கப்பட்ட இரண்டு பெருநாள்கள் ஈகை திருநாள் எனப்படும் நோன்பு பெருநாள்,  தியாகத் திருநாள் எனப்படும் ஹஜ் பெருநாள். இந்த இரண்டு பெருந்தினங்களிலும் இஸ்லாமிய சமுதாய மக்கள் சொந்தங்களுடனும், பந்தங்களுடனும், நண்பர்களுடன் இணைந்து குதூகலாம சந்தோசங்களை பகிர்ந்து மகிழக்கூடிய தருணம்.

ஆனால் இந்த வருடம் கொரோனோ எனும் வைரஸ் ஈகை பெருநாளை புதிய அனுபவமாக மாற்றியுள்ளது. ஆம், மக்கள் வெள்ளத்தால் நிறைந்திருக்கும் புனித தலமோ, குறைந்த நபர்களுடன் காட்சியளிக்கிறது, நண்பர்களுடன் பொது வெளியில் தொழுகையை கொண்டாடும் நண்பர்களோ வீட்டின் உள்ளே அமைதியுடன் பிரார்த்தனை.

இந்த வருட ரமலான் ஒரு புறம் கனத்த இதையத்துடன் கடந்து சென்றாலும், மக்களுக்கு எந்த சூழலையும் தைரியத்துடன் கையாளக்கூடிய மன தைரியத்தை வழங்கியதுடன், இந்த புனித மாதம் முழுவதும் குடும்பத்தைடன் இணைந்து வீடே புனித தொழுகை இல்லமாக மாற்றியுள்ளது என்றால் மிகையாகாது. இத்தருணத்தில் எல்லோருக்கும் எல்லா வளமும், அமைதியும், நோயற்ற வாழ்வும் பெற மனதார பிரார்த்தனை புரிவோம்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply