சொந்த செலவில் 5 கிராமத்தை சேர்ந்த ஊனமுற்றோர் ஆதரவற்றோர்கள் என 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறி அரிசி அடங்கிய அத்தியவசிய தொகுப்புகளை வழங்கிய கடம்பன் குளம் ஊராட்சி தலைவர்..!

விருதுநகர் மாவட்டம் கடம்பன்குளம் ஊராட்சி தலைவர் சொந்த செலவில் 5 கிராமத்தை சேர்ந்த ஊனமுற்றோர் ஆதரவற்றோர்கள் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறி அரிசி அடங்கிய அத்தியவசிய தொகுப்புகளை வழங்கினார்!

விருதுநகர் அருகே உள்ள கடம்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இவர் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பன்குளம் ராமலிங்காபுரம் நமச்சிவாயபுரம்
பசும்பொன்புறம் ஆகிய கிராமத்தில் 800க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் கூலித்தொழில் செய்து அன்றாட வாழ்க்கை நடத்தி வந்தவர்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் கடந்த இரண்டு மாதங்களாக வேலை இழந்து வருமானம் இன்றி கஷ்டப்பட்டு வந்தனர்.ஆகையால் அப்பகுதியை சேர்ந்த ஆதரவற்ற பெண்கள் விதவைகள் முதியோர்கள் என 220 நபர்களுக்கு கடம்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது சொந்த செலவில் 5 கிலோ அரிசி காய்கறி பருப்பு எண்ணெய் அடங்கிய 1.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply