ஏழை மக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு..

ஊரடங்கு காலத்தில் கடனை செலுத்துமாறு ஏழை மக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக சட்ட மன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

வங்கி கடன் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை ஏழை மக்களிடம் உடனடியாக கட்ட வற்புறுத்தும் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்

கொரோணா பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கிய நிலையில் தினக்கூலி பணியாளர், நடுத்தர வர்கத்தனர் என பல்வேறு தரப்பு மக்கள் பணிக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர் அரசு வழங்கிய நிவாரணம் போதுமானதாக இல்லாததால் அன்றாட மூன்று வேளை உணவு உண்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது ஊரங்கால் வருமாணமின்றி தவிக்கும் ஏழை எளிய மக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் வட்டி மற்றும் தவணையை செலுத்த மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே மூன்று மாத காலம் அவகாசம் வழங்கிய நிலையில் தற்போது மேலும் 3 மாத காலம் அவகாசத்தை நீட்டித்துள்ளது இந்நிலையில் ராஜபாளையம் பகுதியில் பொதுமக்கள் வாங்கிய கடனுக்கான வட்டி மற்றும் தவணை தொகையை உடனடியாக கட்ட வங்கிகள் கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் ஏழை எளிய மக்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது உணவிற்கே வழியில்லாத நிலையில் மக்கள் உள்ள போது கடனை திருப்பி செலுத்த கோரி நெருக்கடி கொடுக்கும் நிதி நிறுவணங்கள் வங்கிகள் கூட்டுறவு சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணணிடம் புகார் மனு அளித்தார் புகார் மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..