இராஜபாளையம் அருகே நிரம்பி வழியும் நீர் தேக்கம்; திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை..

இராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான சாஸ்தா கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கடந்த 4 தினங்களுக்கு முன்பு இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான சாஸ்தா கோவில் பகுதியில் மழை பெய்ததால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து சாஸ்தா கோவில் நீர்தேக்கம் நிரம்பி வழிகிறது 34 அடி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம் தற்போது நிரம்பி வழிகிறது குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக இராஜபாளையம் பகுதியில் நல்ல காற்று வீசுவதால் நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீர் கடல் அலைகள் போல் சீறி பாய்வதும் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் காற்றில் வீசுவது போல் இருப்பதால் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது குறிப்பாக தேவதானம், முகவூர் ,தளவாய்புரம், சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த நீர்த் தேக்கத்தில் தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர் இதனால் தற்போது அணை திறந்துவிட்டால் விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதே விவகாயிகளின் கோரிக்கை.

செய்தியாளர், வி.காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..