Home செய்திகள் தகராறு. 9 பேர் மீது வழக்கு

தகராறு. 9 பேர் மீது வழக்கு

by mohan

. நிலக்கோட்டை அருகே எ.ஆவாரம் பட்டியை சேர்ந்த பால்ராஜ் மகன் சதீஷ்குமார்  21, மற்றும் நண்பர்கள் பால்பாண்டி கன்னியப்பன் , மருது  ஆகிய நான்கு பேர்களும் கடந்த 16ம் தேதி 2 இரு சக்கர வாகனங்களில் அதிகளவு போதையில் கொங்க வட்டியை கடந்த எ. ஆவாரம்பட்டி செல்லும்போது கொங்கபட்டியில் வாய்க்கு வந்தபடி தகராறு செய்து சத்தம் போட்டு சென்றுள்ளார்கள்.அப்போது கொங்கபட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற மூதாட்டி சத்தம் போடவே முத்து லட்சுமியை கொலை மிரட்டல் விடுத்தும், தாக்க முயன்றபோது அப்பகுதி அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பிடிக்க முற்பட்டபோது 4 பேரில் சதீஷ்குமார் என்பவர் மட்டும் சிக்கிக் கொண்டார்.கிராமத்தினர் சேர்ந்து சதீஷ்குமாரை கடுமையாக தாக்கியுள்ளார்கள். இதையறிந்த விளாம்பட்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷ்குமாரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு எச்சரித்தும், அறிவுரை கூறியும் வழக்குப்பதிவு செய்து அனுப்பி வைத்தனர்.. இதை மனதில் கொண்ட சதீஷ்குமார் தனது உறவினர்களான ராஜா வயது 39 , மூர்த்தி வயது 38 , தன பாண்டி வயது 34 ,ஆசைத்தம்பி வயது 30, ரவி வயது 35 ,கண்ணன் வயது 38 ,பால்பாண்டி வயது 30, பார்த்திபன் வயது 25 .,கன்னியப்பன் வயது 26 மற்றும் சிலர் கத்தி , அருவாள் மற்றும் பல்வேறு ஆயுதங்களுடன் கிராமத்தின் ஓரப்பகுதியில் வந்துகொண்டிருந்தனர். அப்போது கொங்கபட்டியைச் சேர்ந்த தினகரன் வயது 27, முத்துசாமி வயது 30, அருள் வயது 25 ஆகிய மூன்று பேர்களையும் அந்தக் கும்பல் அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியதால் 3 பேர்களும் சத்தம்போட்டு அலறினார் இதையறிந்த கிராமத்தினர் திரண்டு வருவதை அறிந்த கும்பல் விட்டு தப்பி ஓடிவிட்டார்கள. இதில் பலத்த காயமடைந்த அருள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், முத்துச்சாமி தினகரன் ஆகிய 2 பேர்களும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.சம்பவம் அறிந்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் தலைமையில் மற்றும் விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலையிலும் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொங்கபட்டி என்ற கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னர் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் சம்பவ இடங்களை நேரில் ஆய்வு செய்து உரிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!