நெல்லை அருகே மத்திய அரசை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

நெல்லை அருகே மத்திய அரசை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

நெல்லை அருகே ஆலங்குளத்தில் மத்திய அரசின் தொழிலாளர்,மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும்,பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர் வேலை நேரத்தை 12மணி நேரமாக உயரத்துவதை ரத்து செய்யவேண்டும்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதை தடுக்கும் விதமாக நிறைவேற்றப்பட உள்ள மின்சட்டத்தை கைவிட வேண்டும்.

அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண உதவி குறைந்த பட்சம் 7500/ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குளம் வேன் ஸ்டாண்ட் அருகே தொழிற்சங்கங்கள் சார்பில் CITU மாவட்டத் துணைத்தலைவர் மகாவிஷ்ணு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சமூக இடைவெளியுடன் நடந்தது.

பீடிசங்க மாவட்டத்தலைவர் M.ராஜாங்கம் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் V.குணசீலன், A.வெற்றிவேல், P.S.மாரியப்பன், இ.பாலு,R.அருணாசலம் பெரியார்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..