பீகார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் சொந்த ஊர் அனுப்பப்பட்டனர்.

கொரானா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கையாக இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த வெளி மாநில தொழிலாளர்களில் முதற்கட்டமாக பீகார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், அவர்களது சொந்த மாநிலத்திற்கு இன்று (21.0.2020) அனுப்பி வைக்கப்பட்டனர்.தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 3,174 வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 1,823 தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்து மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு பதிவு செய்துள்ள நபர்களை அந்தந்த மாநிலம் வாரியாக பிரித்து ளூசயஅமை ளுpநஉயைட சிறப்பு இரயில் மூலம் பாதுகாப்பாக அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் இன்றைய தினம் முதற்கட்டமாக பீகார் மாநிலத்தைச் சார்ந்த 456 தொழிலாளர்கள் இராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு இரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு வருவாய் வட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களை வருவாய்த் துறை மற்றும் காவல்துறை மூலம் ஒருங்கிணைத்து சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு இராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பெற்றுள்ளனர். சுகாதாரத்துறை அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று அறிகுறி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மதியம் மற்றும் இரவிற்கான உணவு, குடிநீர், வாழைப்பழம் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்டத்தில் இதுவரை 5,389 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 39 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது எனவும், 5,124 நபர்களுக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 226 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை 21 பேர் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.இந்த நிகழ்வின்போது, ராமநாதபுரம் சரக காவல் துத்தலைவர் திரு.ரூபேஷ்குமார் மீனா , ரயில்வே மதுரை கோட்ட காவல் ஆணையர் வி.ஜெ.பி.அன்பரசு, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி,ராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா, ரயில்வே துணை மேலாளர் (வணிகம்) ஜி.பிள்ளைக்கனி, சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் சி.அஜித்பிரபுகுமார் (இராமநாதபுரம்), பி.இந்திரா (பரமக்குடி), காவல் துணை கண்காணிப்பாளர்கள் கே.வெள்ளைத்துரை (இராமநாதபுரம்), திரு.ஆர்.சங்கர் (பரமக்குடி) உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image