வெளி மாநில தொழிலாளர்கள் பசியின்றி இருப்பதற்கு உணவு உடை அனைத்தையும் தமிழக அரசு கொடுத்து வருகிறது.-அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை தெப்பக்குளம் 54 வது வார்டு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிப் பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழகத்தில் இருக்கக்கூடிய வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பசியின்றி இருப்பதற்கு உணவு உடை அனைத்தையும் தமிழக அரசு கொடுத்து வருகிறது.ரேஷன் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு ஊதியங்களை அந்தந்த சங்கங்கள் முறையாக கொடுத்துவிடும். ஊதியம் கொடுக்காத சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.மக்கள் தனித்து இருக்க வேண்டும், இந்த நோய்க்கு தற்போதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.எனவே பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் அணிந்து கொள்ள வேண்டும்..இந்தியாவில் தமிழகத்தை போல் எந்த ஒரு அரசாங்கமும் நலத்திட்ட உதவிகளை அதிகமாக செய்யவில்லை.வருகிற மாதம் வரை ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மருத்துவ பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். சமூகபரவல் இல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான முகக் கவசங்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் முடியாது.கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு முக கவசம் கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு வருகிறது.ரேஷன் கடைகள் பலசரக்கு கடை கிடையாது எந்த பொருள் வேண்டுமோ,அதை முன்கூட்டியே மக்கள் ரேஷன் கடையை பணியாளர்களிடம் எடுத்துக்கூறி பின்பு வந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.பிராமணர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் தான் பச்சரிசி ரேஷன் கடைகளில் அதிகமாக வாங்குகிறார்கள்.மற்ற பகுதிகளில் வாங்குவதில்லை.ரேஷன் பொருட்கள் கடத்தல் எதுவும் இல்லை

20 கிலோ அரிசிக்கு இரட்டிப்பு மடங்காக 40 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது ஒரு சில மக்கள் வேறு யாரிடமாவது விற்பதற்கு முயல்கிறார்கள்.மக்களிடம் அரிசியை வாங்குபவர்களை விஜிலன்ஸ் துறையினர் கையும் களவுமாக பிடித்து வருகிறார்கள்.திமுக ஆட்சி காலத்தில் ரேஷன் அரசிகள் கப்பல் ரயில் ஆகியவற்றில் கடத்தினார்கள்.அதிமுக ஆட்சிக்காலத்தில் கடத்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. தண்டனைகள் அதிக படுத்த ப்பட்டுள்ளது.ரேஷன் கடைகளில் கடத்தல் போன்ற தவறுகள் நடை பெறுவதற்கு வாய்ப்பு கிடையாது என்று தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..