Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மேற்கு வங்காளத்திற்க்கு அணுமதியின்றி செல்ல முயன்ற 75 புலம்பெயர் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி சோதனை..

மேற்கு வங்காளத்திற்க்கு அணுமதியின்றி செல்ல முயன்ற 75 புலம்பெயர் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி சோதனை..

by ஆசிரியர்

கேரள மாநிலம் பத்தனதிட்டாவிலிருந்து மேற்கு வங்காளத்திற்க்கு அணுமதியின்றி செல்ல முயன்ற 75 புலம்பெயர் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி இராஜபாளையத்தில் கொரோனா  பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் சோதனைச்சாவடியில் வழக்கம்போல் காவலர்கள் மற்றும் சுகாதார துறையினர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த லாரியில் கேரளாவிலிருந்து மேற்கு வங்காளம் செல்வதற்காக லாரி சோதனைச்சாவடி அருகே வந்த போது நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் 75 புலம்பெயர் தொழிலாளர்கள் கேரள மாநிலம் பத்தனதிட்டா பகுதியில் கட்டிட வேலை மற்றும் பல்வேறு வேலைகளில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் பயணித்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு அடுத்து 144 தடை உத்தரவு தொடரப்பட்ட நிலையில் லாரிகள் மூலம் சொந்த ஊருக்கு செல்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளனர். இவர்களை சோதனைச்சாவடியில் நிறுத்தியதை அடுத்து காவல்துறையினர் கொடுத்த தகவலின் பெயரில் வந்த வட்டாட்சியர் ஆனந்தராஜ் மற்றும் இராஜபாளையம் காவல்துறை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை செய்தனர்

இந்த தகவல் மாவட்ட ஆட்சியார் கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர் இதையடுத்து

விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் தென்காசி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தேவிபட்டினம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இவர்கள் அனைவரையும் தங்கவைத்து முதற்கட்டமாக இவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் இவர்களை தனிமைபடுத்தி கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்து அதன் பின்பு இவர்களை ரயில் மூலம் மேற்கு வங்காளத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தார்.

இதுகுறித்து புலம்பெயர் தொழிலாளர் நம்மிடைய கூறும்போது,

தாங்கள் பணி புரிந்து வந்த இடத்தில் வழங்கப்பட்ட அரிசி போன்ற உணவு பொருட்கள் தீர்ந்தது விட்டதை தொடர்ந்து சிரமத்திற்கு ஆளானோம். மேலும் வேலைகள் இல்லாததால் தாங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக லாரியில் ஏறி சென்று கொண்டிருந்தபோது இங்கு தடுத்து நிறுத்தியுள்ளனர் என தெரிவித்தார். மேலும் தங்கள் ஊர் திரும்பவதற்கு தங்கள் மாநில மேற்கு வங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!