கோவில் அர்ச்சகர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோருக்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் நிவாரண உதவியை வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு 144 தடை உத்தரவு மே 30 வரை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடபட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் கோவிலில் பணியாற்றும் சிவாச்சாரியர்கள் கார் வேன் ஓட்டுனர்கள் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டடோர்க்கு அதிமுக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி பாரதி ஒவ்வொருவருக்கும் நிவாரனமாக காய்கறி, அரசி,மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்திவாசிய பொருட்களை வழங்கினார். அரசு அறிவித்த சமூக இடைவேலியை பின்பற்றி அனைவரும் நிவாரணத்தை பெற்று அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இதில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..