சவுதி வாழ் தமிழ் மக்களுடன் நவாஸ்கனி எம்.பி காணொளி மூலம் கலந்துரையாடல்..

இன்று (20/05/2020) சவுதி அரேபியா நேரம் மாலை 04.30 மணி முதல் 06.30 மணி வரை சவுதியில் வாழும் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மக்கள் மற்றும் தமிழகத்தை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

நிகழ்வின் தொடக்கத்தில் நவாஸ்கனி தற்போதைய ஊரடங்கு சூழலில் தமிழக அரசுடன் இணைந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் வரும் காலத்தில் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் பிரச்சினைகள் பற்றியும், இந்த நிவாரண பணியில் வெளிநாட்டு அவர் மக்களின் பங்களிப்பு மற்றும் அந்நிய செலவாணியாக நாட்டுக்கு வரும் வருமானம் போன்றவற்றை பாராட்டி பேசினார்.

இந்த நிகழ்வில் ஜித்தா, ரியாத், தமாம் மற்றும் பல்வேறு பகுதகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image