சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த நிலையூர் கிராம நிர்வாக அதிகாரி மீது இருசக்கர வாகனம் மோதியதால் படுகாயம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நிலையூர் 1 பிட் பஞ்சாயத்து கிராம நிருவாக அலுவலராக பணியாற்றி வருகிறார் சேது. கந்தவேல்.சம்பவத்தன்று நிலையூரில் உள்ள வட மாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு வழியனுப்பிவிட்டு திரும்பும் வழியில் கூடக் கோவில் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது அவரது வாகனத்தின் பின்புறத்திலிருந்து போதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபர் தாறுமாறாக ஓட்டியதோடு மட்டுமில்லாமல் விஏஓ மீது மோதி விட்டார்.இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து கூடக்கோவில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image