Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரையில் நடைபெற்ற ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா பெரியவா அவதரித்த தினம் பக்தர்கள் இல்லாமல் கொண்டாடப்பட்டது!!

மதுரையில் நடைபெற்ற ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா பெரியவா அவதரித்த தினம் பக்தர்கள் இல்லாமல் கொண்டாடப்பட்டது!!

by ஆசிரியர்

விழுப்புரத்தில், 1894, மே 20 ல், சுப்ரமணிய சாஸ்திரிகள் – மகாலட்சுமி தம்பதிக்கு மகனாக பிறந்தார். தன், 13வது வயதில், காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார். பின், 1919 முதல், 1940 வரை, 21 ஆண்டுகள், நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு, பல்வேறு புனிதத் தலங்களை தரிசித்து, பக்தர்களுக்கும் அருளாசி வழங்கினார்.

பழமையான கோவில்களை புனரமைக்கவும், வேதக் கல்வியை ஊக்குவிக்கவும், சுவாமிகள் செய்த தொண்டு அளப்பரியது. தமிழ் மட்டுமின்றி, சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், பிரான்ஸ் உள்ளிட்ட பல மொழிகளில், வல்லமை பெற்றிருந்தார். மேலும் அனைத்து சமுதாயத்தினரும் ஜாதி மத பேதமின்றி பழகி வந்தவர் மகாபெரியவர். சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் உள்ள பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்த சுவாமிகள், அதில் சொல்லப்பட்ட வாழ்க்கை தத்துவத்தை, பக்தர்களுக்கு போதித்து, அவர்களை நல்வழிப்படுத்தினார்.

மக்கள் மத்தியில், அவதார புருஷராக வாழ்ந்த, ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1994, ஜனவரி 8ல், சித்தியடைந்தார். அவர் பிறந்த தினம் மதுரையில் உள்ள கூடல் நகரில் உள்ள அமைந்துள்ள அவரது ஆலயத்தில் மிக சிறப்பான முறையில் அவரது விக்கிரகத்துக்கு பக்தர்கள் இல்லாமல் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

நிறுவனர் நெல்லை பாலு கூறும்பொழுது கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் ஆண்டுதோறும் பக்தர்களுடன் கொண்டாடப்படும் மகா பெரியவரின் பிறந்த நாள் விழா இந்த ஆண்டு பக்தர்கள் இல்லாமல் கொண்டாடுவது சற்று மனவேதனையுடன் இருந்தாலும் அவருடைய ஆசியினால் நாட்டு மக்கள் அனைவரும் நலம் பெற்று ஆசிப் புரிவார் எனத் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!