பாலக்கோட்டில் வருடக்கணக்கில் பூட்டியை கிடக்கும் உணவு பாதுகாப்பு துறை அலவலகம்: கடுமையான பாதிப்பில் வியாபாரிகள்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பணியாற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் வாரத்திற்கு ஒரு முறை கூட வருவதில்லை. அதிகாரிகள் தேடி வரும் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் கூட்டி அலுவலகத்தை கண்டு திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த அலுவலகம் வருடக்கணக்கில் திறக்கப்படாததாலும், உணவு பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்துக்கு வராததாலும் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு வருடம்தோறும் உணவு தர சான்றிதழை புதுப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திடீரென்று சோதனைக்கு வரும் அதிகாரிகள் சான்றிதழ் புதுப்பிக்கவில்லை என்று அபராதம் விதித்து விட்டு செல்கின்றனர் முறையாக அலுவலகம் திறந்தால் சான்றிதழை புதுப்பிக்க தயாராக உள்ள நிலையில் சான்றிதழ் திருப்பித் தராமல் அபராதம் என்ற பெயரில் பணம் வசூல் செய்வது வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது மேலும் புதிதாக கடை வைத்துள்ளவர்கள் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

 மேலும் தற்பொழுது கோடை காலம் துவங்கிய நிலையில் சூட்டைத் தணிக்க பொதுமக்கள் பல்வேறு குளிர்பானங்கள் வாங்கி உண்டு வருகின்றனர் இதில் சில கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது மேலும்,

மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில்  பல்வேறு பகுதிகளுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மாம்பழங்கள், வாழைப்பழங்கள், சப்போட்டா போன்ற பழங்களை வேகமாக பழுக்க வைக்க பல்வேறு கடைகளில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தகைய கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் நீண்ட நாள் தாக்குப்பிடிக்காமல் விரைவில் அழுகிவிடுகிறது. இவ்வாறு அழுகிய பழங்கள் அனைத்தும் சாலையோரங்களில் அதிக அளவு கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசி வருகிறது. கார்பைடு கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைப்பது குறித்து பொதுமக்கள் பலமுறை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது மட்டுமின்றி  கடைகளில் அஜினோமோட்டோ என்ற ரசாயனப் பொடியும் அதிகாரிகளின் பூரண ஆசியோடு தங்கு தடையின்றி புழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர், மேலும் அழுகிய மாம்பழங்களை சாலையின் ஓரம் கொட்டுவது குறித்து புகார் தெரிவித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுருக்கமாக கூறுவதென்றால் உணவு பாதுகாப்புத்துறை என்ற ஒன்றே இப்போது செயல்படுவதில்லை.

எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் கார்பைடு கல் மூலம் பழுக்கவைக்கப்படுவதையும், அழுகிய முட்டை மற்றும் தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருட்கள் உபயோகத்தை தடுத்து நிறுத்தவும், சாலையோரம் அழுகிய பழங்களை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அலுவலகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..