Home செய்திகள் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியத்தில் 1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில்நடக்கும் வளர்ச்சிப் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்..

செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியத்தில் 1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில்நடக்கும் வளர்ச்சிப் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்..

by Askar

செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியத்தில் 1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் நடக்கும் வளர்ச்சிப் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு பகுதி ஆத்திப்பாடி பஞ்சாயத்துக்குட்பட்ட கீழ் வலசை, மேல் வலசை, அக்கரைப்பட்டி, பகுதியில் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாட தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மலையில் விளையக்கூடிய மூங்கில் அரிசி, தினை சாமை, கிழங்கு வகைகளை விற்பனை செய்ததற்காக மலைகளிலிருந்து ஒத்தையடிப் பாதைகள் வழியாக தானிப்பாடி கிராமத்தில் கூடும் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் மலை கிராமத்திற்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியரிடம் தார் சாலை வசதி வேண்டி மனு கொடுத்திருந்தனர். இதையடுத்து ஒரு கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பார்வையிட்டார். பின்னர் தண்டராம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கீழ் ராவ் அந்த வாடி உள்ள அம்மாகுளம் ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணியில் கீழ வணக்கம்பாடி சாலையில் இருளர் குடும்பங்களுக்கு அரசு சார்பில் ரூ 78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் முருகன், கிருஷ்ணமூர்த்தி, வட்டாட்சியர் நடராஜன் பொறியாளர்கள், சிவகுமார், சௌந்தரராஜன், ஊராட்சிமன்றத் தலைவர்கள் குப்பாயி ஆறுமுகம், அம்மாக்கண்ணு, முத்து லட்சுமி, முருகேசன், அரசு ஒப்பந்ததாரர் அருள்குமார், மணிகண்டன், சுப்பிரமணி, ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், முருகன், வெங்கடேசன், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!