திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருள் வழங்குதல்..

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருள் வழங்குதல்..

நாட்டில் கொரோனா நோய்தொற்று பரவும் சூழல் காரணமாக அதை தடுக்கும் வகையில் அரசு 144 தடையுத்தரவு அறிவித்துள்ளதால் மாற்றுத்திறனாளிகள் வேலை, உணவு, வருமானம் இல்லாமல் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.இதுபற்றி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்களிடம் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் பகத்சிங் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் கோபிநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து எடுத்துக்கூறி தங்களால் முடிந்த உதவியை மாற்றுத்திறனாளிகளுக்கு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்ததின் பேரில்

கோரிக்கையை ஏற்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக அணில் பிராண்ட் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான பொருள்கள் அடங்கிய 400 பைகளை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார். வழங்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் உடனடியாக சாணார்பட்டி, ஆத்தூர், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 400 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் நடைபெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் சின்ராசு, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகவள்ளி, தலைவர் வனிதா, மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன், நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் சசிகுமார், செயலாளர் பஞ்சு, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கொரோனா பாதிப்பால் மிகவும் கஷ்டத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க நேரத்தில் உதவி செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். சக்திவேல் அவர்களுக்கு நிவாரணம் பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். இதில் ஆத்தூர் தாலுகா பகுதிகளில் 280 பயனாளிகள் பயன் பெற்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..