ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வறுமையில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 1200க்கும் மேற்பட்ட வறுமையில் வாழும் மழைவாழ்மக்கள், சலவை தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வருமையில் இருக்கும் செண்பகத்தோப்பு மழைவாழ்மக்கள், மம்சாபுரம் சலவை தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா கொரோனா நிவரணமாக வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மம்சாபுரம் பேரூராட்சி அதிமுக கழக செயலாளர் அய்யனார் மற்றும் அரசு அதிகாரிகள்,கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.பொதுமக்கள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை பெற்று சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..