Home செய்திகள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்: தமீமுன் அன்சாரி கைது;கைதான இடத்தில் பதாகை ஏந்தி மு.தமிமுன் அன்சாரி MLA உள்ளிட்ட மஜகவினர் முழக்கம்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்: தமீமுன் அன்சாரி கைது;கைதான இடத்தில் பதாகை ஏந்தி மு.தமிமுன் அன்சாரி MLA உள்ளிட்ட மஜகவினர் முழக்கம்!

by Askar

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்: தமீமுன் அன்சாரி கைது; கைதான இடத்தில் பதாகை ஏந்தி மு.தமிமுன் அன்சாரி MLA உள்ளிட்ட மஜகவினர் முழக்கம்!

முள்ளிவாய்க்கால் போரில் கொத்து கொத்த ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் பதாகை ஏந்தி சமூக இணையதளத்தில் பதிவிடும் போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளித்திருந்தது.

இன்று மாலை 5:30 மணி அளவில் திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் சமூக இடைவெளியுடன் பதாகை ஏந்திட மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், மஜக வினரும் திட்டமிட்டிருந்தனர்.

இதனிடையே முன் எச்சரிக்கையாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA மற்றும் மஜகவினரும் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டனர்.

அங்கு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மு.தமிமுன் அன்சாரி MLA கோயம்பேட்டில் சமூக இடைவெளியின்றி மக்களை கூட விட்டார்கள். சாராயக் கடைகளிலும் நெரிசலில் மக்களை நிற்க வைத்து குடிக்க வைத்தார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக சமூக இடைவெளியுடன் தனியார் இடத்தில் நாங்கள் நின்று பதாகை ஏந்துவது குற்றமா? என கேள்வி கேட்டார்.

தமிழ்நாடு எங்கும் இன்று மஜகவினர் , முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழ மக்களுக்கு நீதி கேட்டு பதாகை ஏந்துகிறார்கள் .அதை தடுக்க முடியாது என்றும் கூறிவிட்டு, காவல் துறை ஜீப்பில் ஏறினார்.

அனைவரும் திருத்துறைப்பூண்டி அங்கை மஹாலில் சிறை வைக்கப்பட்டனர்.

மாலை 6 மணி அளவில் கைதானவர்களுடன் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் 5 நிமிடங்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்கும் பதாகை ஏந்தி நின்றார்.

எல்லோரும் ரமலான் நோன்பில் இருந்ததால்,பின்னர் அனைவரும் நோன்பு துறக்க காவல் துறை சார்பில் குளிர்பானங்கள், பேரித்தம் பழங்கள், பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது.

இவ்வாண்டு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தவில்லையே என கவலைப் பட்டோம். தற்போது காவல்துறையே அதற்கு ஏற்பாடு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது என மு.தமிமுன் அன்சாரி MLA கூற, காவலர்கள் சிரித்தனர்.

இரவு 8 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அப்போது போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு சர்வதேச நீதி கேட்டு மஜகவினர் முழக்கம் எழுப்பி கலைந்தனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!