ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை இணைப்பை முறைப்படுத்திக்கொள்ள நகராட்சி நிர்வாகம் வேண்டுகள்

இது குறித்து இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கை: ராமநாதபுரம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் , 2013 நவ.6 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது . பாதாளச் சாக்கடை திட்டத்திற்குரிய அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் நகராட்சி நிர்வாகம் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் ஒரு சிலரின் தவறான பயன்பாட்டால் , கழிவுநீர் குழாய்களில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு , பராமரிப்பில் சிரமங்கள் ஏற்படுவதுடன் , பொது சுகாதாரப் பிரச்னை ஏற்படுகிறது . எனவே , பொதுமக்கள் தங்களது பாதாளச் சாக்கடை கட்டமைப்பில் தேவையற்ற காலி பாட்டில்கள் , துணிகள் , பிளாஸ்டிக் பொருட்கள் , இதர திடக்கழிவுகள் ஆய்வுக்குழியில் விழாத வகையில் வலையமைப்புகள் ஏற்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் . மழைநீரை பாதாள சாக்கடை குழாய்களில் விடாமல் , மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு தனியாக ஏற்படுத்தி அதன் மூலம் மழைநீர் சேகரிக்க வேண்டும் . இதனால் , பாதாள சாக்கடை குழாய்களில் நீர்வழிந்தோடி சாலையில் கழிவுநீர் பெருகுவது தடுக்கப்படுவதுடன் , மழைநீர் சேகரிக்கப்படுவதால் , நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது . மேலும் , பொதுமக்கள் தங்களது பாதாளச் சாக்கடை இணைப்பு இதுநாள் வரை அனுமதியற்றவையாக இருந்தால் , அதனை நகராட்சியில் மனு செய்து வரைமுறை படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . இந்த வாய்ப்பை தவறவிட்டால் , கழிவுநீர் இணைப்பு துண்டிப்பதுடன் , சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இச் செயல்பாட்டை. கண்டறிய வார்டு வாரியாக நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளனர் . எனவே , பொதுமக்கள் பாதாள சாக்கடை திட்ட கட்டமைப்பை சீர்படுத்தி, கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்டபூர்வ நடவடிக்கையை தவிர்க்குமாறு நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..