உச்சிப்புளி அருகே கிராம மக்களுக்கு தமாகா., நிவாரணம்..

தமாகா சார்பாக கொரோனா நிவாரணமாக, ராமநாதபுரம் மாவட்டம் என்மனம் கொண்டான் ஊராட்சி முருகனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு நம்பாயி வலசை  கற்பக விநாயகர் கோயில் முன் நடந்த நிகழ்வில்  அரிசி வழங்கப்பட்டது.

கீழ நாகாச்சி ஊராட்சி தலைவர், ராணி கணேசன் தலைமை தாங்கினார்.  தமிழ் மாநில காங்கிரஸ் (கிழக்கு) மாவட்ட தலைவர்  வி.என். நாகேஸ்வரன் (உச்சிப்புளி ரோட்டரி சங்க பட்டயத்தலைவர்),  உச்சிப்புளி ரோட்டரி சங்க தலைவர்  எஸ்.ஏ. அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெகன் சுரேஷ் நினைவு அறக்கட்டளை நிர்வாகி ஜெ.தினேஷ் பாபு ( ராமநாதபுரம் இசிஆர்., ரோட்டரி சங்க  பட்டயத்தலைவர்) அரிசி தொகுப்பு வழங்கினார். உச்சிப்புளி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் டாக்டர் ஜெயபாலன், வழக்கறிஞர் செந்தில் குமார். முன்னாள் செயலர்கள் கண்ணன், பிஸியோதெரபி டாக்டர் தாமரைச்செல்வன், தலைவர் தேர்வு ராஜேஸ்வரன், சிவக்குமார், கருணை குமார் ஹயக்கிரீவன் சத்தீஸ்வரன், சுப்ரமணி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..