இராஜபாளையம் அருகே தேசிகாபுரம் சோழபுரம் ஆகிய பகுதியில் கிருமி நாசினி தெளித்த சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதம்..

இராஜபாளையம் அருகே தேசிகாபுரம் சோழபுரம் ஆகிய பகுதியில் கிருமி நாசினி தெளித்த சட்டமன்ற உறுப்பினரிடம் சாலை வசதி செய்து தர கோரி பெண்கள் கோரிக்கை. போட்டோவுக் போஸ் கொடுத்துவிட்டு வேலைகள் பார்க்கவில்லை என சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேசிகா புரம் மற்றும் சோழபுரம் கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஈடுபட்டு கிராமப் பகுதி வீதி வீதியாக சென்று கிரிமி நானியை தெளித்தார் அப்போது அப்பகுதி பெண்கள் தங்கள் பகுதிகளில் சாலை வசதி இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக சிரமப்பட்டு வருவதாகவும் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என நீங்கள் எங்களிடம் ஒட்டு கேட்டு வரும் போது கோரிக்கை வைத்தோம் இதுவரை நீங்கள் நிறைவேற்றவில்லை என கோரிக்கை வைத்தனர் டெண்டர் விடப்பட்டுள்ளது விரைவில் பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.

இதையடுத்து சோழபுரம் பகுதிக்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினரிடம் தங்கள் பகுதியில் வாறுகால் தூய்மை செய்யவில்லை நீங்கள் வருகிர்கள் போட்டோ எடுத்து போஸ் கொடுத்துவிட்டு எந்த பணியும் செய்யவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த ஒருவர் எம்எல்ஏ விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எம்எல்ஏ வாறுகால் சுத்தமாக உள்ளது அப்படி எங்காவது அடைப்பு இருந்தால் நான் இறக்கி என் கை விட்டு சுத்தம் செய்கிறேன் அடப்பு இருக்கும் இடத்தை உங்களால் காட்ட முடியுமா என கேட்டார் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக குறை சொல்லி பேசக்கூடாது என சட்டமன்ற உறுப்பினர் அவரிடம் கோபத்துடன் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..