தன் படிப்பிற்கான சேமிப்பை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய மாணவி.. பாராட்டிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..

மதுரை அண்ணா நகரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி நேத்ரா கொரோனா ஊரடங்கால் வறுமையில் வாடும் மக்கள் குறித்து தனது தாய் தந்தையிடம் கவலை தெரிவித்து அவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட அவரது தந்தை மோகன் சலூன் கடை தொழில் மூலம் தான் சம்பாதித்து தன் மகளின் எதிர்கால ஐஏஎஸ் படிப்பிற்காக வங்கியில் சேமித்த ஐந்து லட்சம் பணத்தை எடுத்து நூற்றுக்கணக்கான மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.

தந்தை மற்றும் மகளின் இந்த மனிதநேய செயலை அறிந்து வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை சிம்மக்கல்லில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் இருவரையும் வாழ்த்தி பேசியதோடு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதனை ஏற்றுக்கொண்ட மோகன் தனது குடும்பத்தின் சார்பில் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் அசோக்குமார் மற்றும் கண்ணன் செய்தனர். சமூக ஆர்வலர்கள் மாயகிருஷ்ணன், கிரேசியஸ், மஸ்தான், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஒரு சில நிமிடங்களே நடைபெற்றது. பங்கேற்ற அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தி உறுதி செய்தார் வழிகாட்டி மணிகண்டன்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image