Home செய்திகள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல மேனுவல் பாஸ் வழங்க வேண்டும்:- மாவட்ட ஆட்சியரிடம் MLA அபூபக்கர் கோரிக்கை!

அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல மேனுவல் பாஸ் வழங்க வேண்டும்:- மாவட்ட ஆட்சியரிடம் MLA அபூபக்கர் கோரிக்கை!

by Askar

அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல மேனுவல் பாஸ் வழங்க வேண்டும்:- மாவட்ட ஆட்சியரிடம் MLA அபூபக்கர் கோரிக்கை!

கொரோனா நிவாரண உதவிகளை பல்வேறு இடங்களில் வழங்கிய கடையநல்லூர் எம்எல்ஏ முகம்மது அபூபக்கர் இன்று 14-05-20 மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளனை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.

கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி திரிகூடபுரத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பில் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது தற்போது அந்த கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுது ஆகிய நிலையில் சுமார் இரண்டு மாதங்களாக அப்பகுதியில் தண்ணீர் வழங்கப்படாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள் இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆகையால் தாங்கள் நேரடி கவனத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து #ரூபாய்_25_இலட்சம் வழங்கினேன் அதில் என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டது என்ற விபரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தென்காசி மாவட்ட மக்கள் அதிகமாக திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர் ஆகையால் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி செல்ல மேனுவல் பாஸ் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மாவட்டத்தில் உள்ள கடைகளை ஏசி இல்லாமல் சமூக இடைவெளி கடைபிடித்து கட்டுப்பாடுடன் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும்,

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு எந்த வகையான சோதனை நடைபெறுகிறது என்ற விபரங்களை கேட்டு கொண்டார்.

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 4 டயாலிசிஷ் மிஷின் பொருத்தப்பட்டுள்ளது அதை முழுமையாக மக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடிகளை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!