தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல், படிப்படியாக நீக்க வேண்டும் என முதலமைச்சரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை!

தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல், படிப்படியாக நீக்க வேண்டும் என முதலமைச்சரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை!

தமிழகத்தில் கொரோனாவின் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு, மருத்துவ நிபுணர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதலமைச்சரிடம் அளித்த பரிந்துரைகள் தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் ஊரடங்கை 100 சதவீதம் முழுமையாக கைவிட வாய்ப்பு இல்லை. படிப்படியாகத்தான் குறைக்க வேண்டி உள்ளது. எனவே ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல் படிப்படியாகத்தான் நீக்கவேண்டும் என முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளோம். ஊரடங்கை நீட்டித்தால்தான் கொரோனா மீது மக்களுக்கு பயம் வரும்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது குறித்து கவலை அடைய வேண்டாம். கொரோனா குறித்து அதிக பரிசோதனை செய்வதை குறைக்க கூடாது என்றும் கூறி உள்ளோம். அதிக அளவில் பரிசோதனை செய்வதால்தான் அதிக நோயாளிகளை கண்டறிய முடிகிறது. தமிழகத்தில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது.

பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு மாஸ்க் அளிக்க வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிந்து பணியாற்ற வேண்டும்.

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image