பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிவாரணப் பொருட்கள்:பெற்றோர்களுடன் வந்து நிவாரணப் பொருட்களின் தொகுப்பை பெற்றுச் சென்றனர்! 

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிவாரணப் பொருட்கள்:பெற்றோர்களுடன் வந்து நிவாரணப் பொருட்களின் தொகுப்பை பெற்றுச் சென்றனர்!

தேனி மாவட்டம் பெரியகுளம் புத்தர் நடுநிலைப் பள்ளி யில் பயிலும் மாணவ, மாணவியர் 258 நபர்களின் குடும்பத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில், பள்ளி தலைமை ஆசிரியர் வேணுகோபால், மற்றும் விஜயலட்சுமி தலைமையில் இப்பள்ளியில் பயிலும் மாணவ ,மாணவியர்களின் பெற்றோர்களுக்கு அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் , மளிகை சாமான்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பைகள் வழங்கப்பட்டன. இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் பெரும்பாலும் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியது பாராட்டுக்குரிய, வரவேற்கத்தக்க செயல் என்று சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்வின்போதுபள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிவாரணப் பொருட்கள் பெற வந்த பெற்றோர்கள், மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டது. சமூக விலகளை கடைபிடித்து பெற்றோர், மற்றும் குழந்தைகள் கொரோனா நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.

A. சாதிக் பாட்சா நிருபர் , தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..