Home செய்திகள் கொரோனா தொற்று தொடர்ந்து ஏறு முகமாக இருக்கும் இந்த நேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உடனடியாக திரும்ப பெற தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்..

கொரோனா தொற்று தொடர்ந்து ஏறு முகமாக இருக்கும் இந்த நேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உடனடியாக திரும்ப பெற தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்..

by Askar

கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து பள்ளிகள் திடீரென்று மூடப்பட்டது. ஊரடங்கு மற்றும் பொது முடக்கம் காரணமாக மக்கள் சொல்லொணா துன்பத்தில் ஆழ்ந்து வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். உணவு, வேலை இல்லாமல் பெரும் துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர்.

பல்கலைக்கழக மானியக் குழு கூட மாணவர்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இத்தகைய தேர்வுகளை நடத்திட ஜூலை மாதத்தில் அது பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் கொரோனா தொற்று தொடர்ந்து ஏறு முகமாக இருக்கும் இந்த நேரத்தில் பத்தாம் பொதுத் தேர்வு என்று அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல மாநிலங்களிலும் தேர்வுகள் பற்றிய திட்டமிடுதல் இல்லை. மத்திய தேர்வு வாரியம் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூலை மாதம் தான் நடைபெறும் என அறிவித்துள்ளது. பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் CBSE மாணவர்களும் சேர்க்கப்பட உள்ளனர். அவர்களுக்கு ஜூலை மாதம் தேர்வு முடிவுகள் வரும் நிலையில் தமிழகத்தில் +1 வகுப்புகள் தொடங்கப்படாதா நிலை ஏற்படும்.

கொரானாவின் தாக்குதல், அச்சம், பீதி, நிச்சயமற்ற நிலை, பெற்றோர்கள் வருவாய் இழப்பு போன்ற வற்றின் ஊடாக தேர்வுகள் பற்றியே சிந்திக்க முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனர்.

இது போன்ற சூழ் நிலையின் காரணமாக செய்வது அறியாது நிற்கும் பெற்றோர் ,மாணவர் மனத்தில் இது போன்ற அறிவிப்புகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.16 வயதுக்கு குறைவான அரசுப் பள்ளி உள்ளனர்.

மாணவ மாணவிகள் ஊட்டச்சத்து குறைபாடு , நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும் எனவே நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தேர்வு பணிக்கு வரும் ஆசிரியர்கள் பொது போக்குவரத்தை பயன் படுத்துகின்றனர். தேர்வு மையங்களிலும் . விடைத்தாள் திருத்தும் மையங்க்களிலும் நோய் பரவலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தேர்வு அறைகளில் மாணவர்கள் கைக்குட்டை கொண்டு செல்ல அனுமதிக்கப் படுவதில்லை பல பள்ளிகள் கொரோனா தடுப்பு கயங்களாக செயல்பட்டு வருகின்றன. இன்னிலையில் தேர்வு அறிவிப்புகள் காலச்சூழல் கருத்தில் கொள்ளாமல், அவசர அறிவிப்புகளாக உள்ளன

இவ்வளவு நாட்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருந்த பெற்றோர் மத்தியில் தேவையற்ற அச்ச உணர்வு ஏற்படும்.ஒரு மையத்தில் ஒருவருக்கு ஏற்படும் நோய்த் தொற்று பல ஊர்களுக்கும், வீடுகளுக்கும் நோயை கொண்டு சேர்க்கும். அதிகமான மாணவர்கள் வர இயலாத (Absentees) நிலையை ஏற்படுத்தும், பாரதப் பிரதமர் நான்காவது பொது முடக்கத்தை அறிவித்துள்ள நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

கோவிட் 19 க்காக பள்ளி கள் மூடியதில் இருந்து, மாணவர்களுக்கு தேர்வுக்கான பயிற்சி எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் தனியார் பள்ளிகள் ஆன் லைன் உள்ளிட்ட பிற பயிற்சிகளை வழங்கி வருகின்றன. தேர்வுக்கு முன் குறைந்தது 10 வேலை நாட்களாவது ஆசிரியர்களுக்கு வழங்கி, மாணவர்களுக்கு தேர்வுக்காகவும், உளவியல் ரீதியாக தயார்படுத்த வேண்டும். இந்த சூழ்நிலையில் அரசு – தனியார் பள்ளி கற்றல் சூழ்நிலையில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இது சமத்துவ தேர்வு முறைக்கு எதிரானது.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு கோவிட் 19 குறித்து விழிப்புணர்வு எவ்வளவு தூரம் ஏற்பட்டுள்ளது என்பதும் கேள்விக்குறியே. இச் சூழலில் அவர்கள் பாதுகாப்பு முறைகளைக் கையாளுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மாணவர்களுக்கான ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதிகளையும் கணக்கில் கொள்ளாமல் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு உடல் நலப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தேர்வுகளைக் கைவிடுமாறு கேட்டுக் கொல்கிறோம்

ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் யாரிடமும் கருத்துக் கேட்காமல் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது பல்கலைக்கழக மானியக் குழு, ஓர் நிபுணர் குழு அமைத்து அதன் அடிப்படையில் முடிவு செய்ததைப் போன்று, பள்ளிக் கல்வித் துறை ஓர் நிபுணர்கள் குழு அமைத்து அதன் முடிவுகள்படி பத்தாம் வகுப்பு தேர்வுகளை முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

 பேட்ரிக் ரெய்மாண்ட் பொதுச்செயலாளர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!