செங்கம் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் காவல்துறையினர் அதிரடியாக கைப்பற்றி அழித்தனர்..

செங்கம் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் காவல்துறையினர் அதிரடியாக கைப்பற்றி அழித்தனர்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் மதுவிலக்கு காவல்துறையினர் கைப்பற்றி அழித்தனர்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக 144 ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் செங்கம் பகுதியில் கள்ளச்சாராயம் அமோக விற்பனையில் ஈடுபட்டு வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. டாஸ்மாக் கடை மூடப்படும் நிலையில் மது பிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் செங்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சும் சம்பவங்கள் நடந்து வருகின்றது. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் செங்கம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் பெரும் சாராயம் காய்ச்சுவதாக ஊரல் போடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் 10 பேரல்களில் இருந்த 600 லிட்டர் சாராய உரலை கைப்பற்றி அதிரடியாக அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவது ஊரல் போற்றப்பட்டவர் அவர் யார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..