Home செய்திகள் மண்டபம் முகாம் இலங்கை அகதிகளுக்கு லண்டன் டாக்டர்கள் நிவாரணம்

மண்டபம் முகாம் இலங்கை அகதிகளுக்கு லண்டன் டாக்டர்கள் நிவாரணம்

by mohan

இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த டாக்டர்கள் சதா மற்றும் நிவேதிதா. லண்டனில் பணியாற்றி வரும் இவர்கள், கிளி அமைப்பு மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோருக்கு நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை தேசிய ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதித்த இலங்கை அகதிகளுக்கு நிவாரணம் வழங்க இவர்களது நெருங்கிய நண்பரான ஆறுமுகம் (அரசு மேல்நிலைப்பள்ளி, பனைக்குளம்) ஆசிரியரை தொடர்பு கொண்டனர். டாக்டர்கள் வழங்கிய நிதியில், மண்டபம் முகாம் 80 அகதிகள் குடும்பங்களுக்கு ரூ.45, 480 மதிப்பில் மளிகைப் பொருட்களை ரெட் கிராஸ் சொசைட்டி மூலம் வழங்க ஆசிரியர் ஆறுமுகம் ஆலோசனை தெரிவித்தார். இதன்படி 15 வகை மளிகை பொருட்களை மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன் தலைமையில் இன்று வழங்கப்பட்டது. ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட செயலர் எம்.ராக்லாண்ட் மதுரம், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர் எம்.ரமேஷ் (உடற்கல்வி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம்), மண்டபம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் எம்.பாலமுருகன், வி.எம். ரமேஷ்பாபு (உடற்கல்வி இயக்குநர், ராஜா மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்), உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகர் (தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில அமைப்பு செயலர்), செல்வகுமார் இப்ராகிம், ரெட் கிராஸ் சொசைட்டி ஆம்புலன்ஸ் டிரைவர் தயாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை அழகன்குளம்அரசு மேல்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சலர் ஆறுமுகம் செய்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!