Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வாலாந்தரவை மக்களுக்கு திமுக நிவாரணம்..

வாலாந்தரவை மக்களுக்கு திமுக நிவாரணம்..

by ஆசிரியர்

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழிகாட்டல் படி, இராமநாதபுரம் நகராட்சி முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், திமுக., மாநில மகளிரணி துணைச்செயலருமான முனைவர் எம்எஸ்கே பவானி ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் வாலாந்தரவை கே.ஜெ.பிரவின் ஏற்பாட்டில் மண்டபம் மேற்கு ஒன்றியம் வாலாந்தரவையில் 125 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

மண்டபம் மேற்கு ஒன்றிய முன்னாள் செயலர் விசி கனகு, டாக்டர் எம்எஸ்கேஆர்  ஈஸ்வர பிரசாத், வாலாந்தரவை ஊராட்சி செயலர் பிஎன் முனியசாமி, மின் வாரிய தொமுச சத்தியேந்திரன், இணையதள திமுக., ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், பிஎம்கே மோட்டர்ஸ் உரிமையாளர் மயில்வாகனன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் கலைமதி ராஜா, நகர் வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வபிரகாஷ், கிளைச்செயலர் முத்து உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!