குப்பையை அகற்றாமல் தீ வைப்பு மூச்சுத் திணறலில் தில்லையேந்தல் பஞ்சாயத்து…வீடியோ செய்தி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாசிம் பீவி அப்துல் மகளிர் கல்லூரிக்கு செல்லும் சாலையில்  குப்பைத்தொட்டி இல்லாத நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி உள்ளன. ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தாத காரணத்தினால். அங்கு தெரு ஓரத்தில் குப்பைகளை  வீசி செல்கிறார்கள்.

இது சம்பந்தமாக அப்பகுதி வாசி கூறுகையில்,  @வார்டு உறுப்பினரிடம் கூறியபோது அவர் அதற்கு செவி சாய்க்கவில்லை. ஊராட்சி அதிகாரிகளிடம் குப்பையை அப்புறப்படுத்த கூறியபோது. இன்று ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் அந்த குப்பையை தீ வைத்து எரித்தனர் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.” என்றார்.

மேலும் இதைப்பற்றி அப்பகுதியைசேர்ந்த ராசு என்பவர்  கூறியநாவது, “இப்பகுதியில் குழந்தைகள் பயிலும் ஸ்கூல் மற்றும் மகளிர் கல்லூரி இருக்கின்றன, சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை போடுவதற்கு இடமில்லாமல் ரோட்டோரத்தில் கொட்டுகிறார்கள் இதை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தாமல் தீவைத்து இருப்பதால் அதிலிருந்து வரும் நச்சு புகையினால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.  நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.  உடனடியாக மாவட்ட நிர்வாகம் அப்பகுதிக்கு குப்பைத்தொட்டி வைத்து தினமும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

கீழை நியூஸ் SKV சுஐபு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..