Home செய்திகள் உசிலம்படடியில் கொரோனாவால் வேலையிழந்த சுமார் 40ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு தேடிச் சென்று உதவி செய்த இளைஞர்..

உசிலம்படடியில் கொரோனாவால் வேலையிழந்த சுமார் 40ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு தேடிச் சென்று உதவி செய்த இளைஞர்..

by mohan

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் பாமரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஊரடங்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் உசிலம்பட்டிப் பகுதிகளில் கொரோனாவால் வேலையிழந்த சுமார் 40ஆயிரம் குடும்பங்களுக்கு தேடிச் சென்று அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட மளிகைச் சாமான்களை வழங்கிஉதவி செய்துள்ளார் இளைஞர் ஒருவர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயபாண்டியன் (39).இவர் மருத்துவராக உள்ளார்.கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதைக் கண்ட விஜயபாண்டி தனக்கு தெரிந்த ஏழைக்கு தனது மருத்துவமனை வாளகத்திலேயே ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட மளிகைச் சாமான்களை வழங்க ஆரம்பித்தார்.பின்னர் தனது நண்பர்கள் மூலம் கிராமப் பகுதிகளில் ஏழை எளிய மக்கள் கஷ்டப்படுவர்களை தெரிந்து கொண்டு அவர்கள் இருக்கும் பகுதிக்கே சென்று நிவாரண உதவி செய்ய ஆரம்பித்தார்.இதுவரை உசிலம்பட்டி பகுதியிலுள்ள நரிக்குறவமக்கள் நலிவடைந்த இசைக்கலைஞர்கள் மாற்றுத் திறனாளிகன் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கட்டிடத் தொழிவாளர்கள் காலனிப்பகுதி மக்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் என சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோருக்கு உதவி புரிந்துள்ளார். மேலும் உசிலம்பட்டிப் பகுதியில் பண்ணைப்பட்டி சமத்துவபுரம் உத்தப்பநாயக்கனூர் செக்காணுரணி உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளுக்குச் சென்று காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உதவியுடன் நிவாரண உதவிகள் செய்துள்ளார்.இந்த ஊரடங்கு காலத்தில் தன்னலம் கருதாமல் தொண்டாற்றி வரும இற்த இளைஞர் உண்மையில் பாராட்டுக்குரியவர்தான்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!