செங்கம் அருகே இரு தரப்பினரிடையே பயங்கர மோதல்- 6 பேர் கைது!

செங்கம் அருகே இரு தரப்பினரிடையே பயங்கர மோதல்- 6 பேர் கைது!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள மெய்யூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் ரூபன் (வயது 32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாயக்கதூரான் இவரது மகன் தேவேந்திரன் (43) ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஒருவருக்கொருவர் ஆபாசமாக திட்டி உருட்டுக்கட்டையால் தாக்கி கொண்டனர். மேலும் வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

இந்த நிலையில் இரு தரப்பினரும் வாணாபுரம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதில் ரூபன் கொடுத்த புகாரின் பேரில் தேவேந்திரன் (49), அண்ணாமலை (26), அரவிந்த் (33), இதேபோல் தேவேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ரூபன் (32), மணிமாறன் (46), மணவாளன் (29) ஆகிய 6 பேரை வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal