கீழக்கரையில் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்…

மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதலாக கொரானா நிதி வழங்க கோரியும் தமிழகத்தில் கொரனா பாதிக்கப்பட்டு அல்லல்படும் இவ்வேளையில் மாநில அரசு மதுபான கடைகளை திறப்பதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (07/05/2020) கீழக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர்  ஆர். மகாலிங்கம், வர.குணசேகரன், மாரியப்பன், விக்டர், செல்வவிநாயகம், கிருஷ்ணன், பெரோஸ், மற்றும் கீழக்கரை நகர் திமுக துணைச் செயலாளர் என்.பி.கே கென்னடி, கலந்து கொண்டு அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பினர்.

கீழை நீயூஸ்
SKV சுஐபு