Home செய்திகள் தொடரும்  மேட்டுப்பாளையம் சமூக நல குழுவின் பேரிடர் கால பணிகள்:-குவியும் பாராட்டுக்கள்..

தொடரும்  மேட்டுப்பாளையம் சமூக நல குழுவின் பேரிடர் கால பணிகள்:-குவியும் பாராட்டுக்கள்..

by Askar

தொடரும்  மேட்டுப்பாளையம் சமூக நல குழுவின் பேரிடர் கால பணிகள்:-குவியும் பாராட்டுக்கள்..

கடந்த 2015 இல் இருந்து பல்வேறு சமூக பணிகளை சிறப்பாக செய்து வரும் நம்ம மேட்டுப்பாளையம் சமூக நலக்குழு தமிழகம், கேரளா மாநிலங்கள் இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட போது நேரடியாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலட்சக்கணக்கான மதிப்புள்ள நிவாரண பொருட்களை நேரடியாக கொண்டு சேர்த்தனர்.

கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டு நம்ம மேட்டுப்பாளையம் சமூக நல குழு பல்வேறு சமுதாய சேவைகளை செய்து வருகிறது.

ஏழை,எளிய மக்களுக்கு காலை ,மதியம் உணவு மலைவாழ் மக்களுக்கு அரிசி பருப்பு சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தனர்.

இதைத்தொடர்ந்து நம்ம மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கு பல்வேறு கட்டமாக கபசுர குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்கும் மக்களுக்கு நேரடியாக வழங்கினர்.

அதே போல் இன்றும் ஐந்தாவது கட்டமாக மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள புதிய காய்கறி மார்க்கெட்டில் காய்கறி மண்டி உரிமையாளர்கள்., ரைட்டர்கள்,சுமை தூக்கும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள் என சுமார் 650 பேருக்கு கபசுரக் குடிநீர் இன்று நேரடியாக வழங்கப்பட்டது.

மேலும் முக கவசங்கள் இல்லாமல் வந்த சுமார் 350 பேருக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது.

கபசுரக் குடிநீர்., முக கவசங்கள் வழங்கும் போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.

மருத்துவர்கள் மகேசுவரன்., கலா மகேசுவரன் ஆகியோர் நிகழ்வை துவக்கி வைத்தனர்.

காய்கறி மண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் வைத்தியலிங்கம் மற்றும் SH.ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நம்ம மேட்டுப்பாளையம் சமூக நலக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் வழக்குரைஞர் கா.ப.ரஹ்மான்,முனைவர்,ஜெயக்குமார்தோழர் பாஷா ஆகியோர் தலைமையில்K. தமிழகம் சேட். முகமது ரஃபி ஒயிட் பாபு, அப்துல் ரஜாக், அக்தர் உசேன் ஜெய்கணேஷ்,நவீன்,யாசீன்,சச்சிதானந்தா கண்ணன்,பால் இஞ்சினியரிங் ஆனந்த்,தினேஷ்,யாசர் ஆகியோர் இணைந்து நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!