சுரண்டை ஆலங்குளம் பகுதியில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்…

மதுக்கடையை திறக்கும் தமிழக அரசை கண்டித்து சுரண்டை நகர திமுக,ஆலங்குளம் பகுதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கு ஏற்ப சுரண்டை நகர திமுக சார்பில் கலைஞர் அறிவாலயம் முன்பு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமையில் மதுக்கடையைத் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக சமுக இடைவெளியுடன்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சாமுவேல் மனோகர், ஆறுமுகசாமி, சுப்பிரமணியம், சங்கரநயினார், பூல் பாண்டியன், சுதன் ராஜா, கணேசன், ஷேக்மைதீன், ஐயப்பன்,சசிகுமார், சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் சுரண்டையில் உள்ள 18 வார்டுகளிலும் அவரவர் வீட்டு முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாம்பவர்வடகரையில் இளைஞரணி அமைப்பாளர் முத்து தலைமையிலும், வீராணத்தில் மாவட்ட சிறுபான்மை பிரிவு சேக் மைதீன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ஆலங்குளத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் வேண்டுகோளின்படி மதுக்கடை திறப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆலங்குளம் 5 வது வார்டில் திமுக நகர செயலாளர் S.P.D.நெல்சன்.BABL. இ.பாலு,தாலுகா குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, K.முருகன் 5 வது வார்டு நிர்வாகி காங்கிரஸ் கட்சி, M.S.செந்தில்குமார். நிதிசெயலர் திராவிட தமிழர்கட்சி, K.ராஜ், பெரியார்குமார் V.சந்திரசேகர்; பாக்கியராஜ், M.விஜயமுருகன் ஆதி,நாகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..