வெளியூரில் இருந்து பலர் வருவதால் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை!

தர்மபுரி மாவட்டம்  பாலக்கோடு  சுற்றுவட்டார பகுதிகளுக்கு  கடந்த சில நாட்களாக  கொரோனா வைரஸால் அதிக பாதிக்கப்பட்ட சிகப்பு மண்டல பகுதியான சென்னை  கோவை ஈரோடு  திருப்பூர்  ஆகிய பகுதிகளில் இருந்து  மக்கள்  திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களை  கண்காணித்து  பரிசோதனை செய்யவும் குறிப்பிட்ட காலம் வரை  தனிமைப்படுத்த வேண்டியது  தற்போது அவசியமாகியுள்ளது . இதுபோன்று வரும் நபர்களை  தனிமை படுத்தி பரிசோதனை செய்யவும் தேவையான  இடங்களை  தேர்வு செய்வது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தயார்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.  மேலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி  இன்று முதல்  கடைகள் திறக்கப்படுவதால்  அரசு அறிவித்த ஆலோசனையின்படி  அறிவுறுத்தலின்படி  கடைக்காரர்கள்  முறையாக  கடைகளை  திறக்கிறார்கள்.

மேலும்  கடையில் வேலை செய்பவர்களும்  பொருட்களை வாங்க வருபவர்களும்  போதிய சமூக இடைவெளியை கடைபிடித்து  முகவுரை  கையுறை ஆகியவற்றை பயன்படுத்துகிறார்களா  என்றும் வாடிக்கையாளர்களுக்கு  கிருமிநாசினிகள் வழங்கி  கைகளை சுத்தப்படுத்துவது  போன்றவை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்  என்பன குறித்து பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வட்டார  வளர்ச்சிஅலுவலர்கள் அன்பழகன், கெளரி,பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் காவல் ஆய்வாளர் விஸ்நாதன், வட்டாட்சியர் ராஜா, பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்ரி, மாரண்டஅள்ளி பேருராட்சி செயல் அலுவலர் காதர்,மருத்துவ அலுவலர் சரஸ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.