இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு பொருட்கள் வழங்கிய முன்னாள் கவுன்சிலர்..

இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாழக்கூடிய முதியோர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் இலவசமாக அரிசி, காய்கறி வழங்கினார் முன்னாள் கவுன்சிலர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதிகளில் வசிக்க கூடிய பெரும்பாலான பொதுமக்கள் கூலித் தொழில் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக நூற்பாலைகள் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு போட்ட நாள் முதல் நூற்பாலைகள் செயல்படாத நிலையில் வறுமையில் வாடி வந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் முதியோர்களுக்கு வடக்கு மலையடிப்பட்டி 20 வது வார்டு முன்னாள் அதிமுக கவுன்சிலர் சோலைமலை தனது சொந்த பணத்தில் 300 நபர்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள் அரிசி, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

அந்த அத்தியாவசிய பொருட்களை வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் வழங்கினார். இதில் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்து முதியோர்களும் பொதுமக்களும் வரிசையில் நின்று நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..