மதுக்கடைகளை திறக்க வெல்ஃபேர் கட்சி கடும் கண்டனம்..

ஊரடங்கு முழுமையாக நீக்கப்படாத நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க வெல்ஃபேர் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எடப்பாடி அரசே.! நிர்வாகத்துறையே.! நியாயம் தானா.? இது நியாயம் தானா.??

உலகளாவிய தொற்று கோவிட்-19 காரணமாக இரண்டு மாதங்களாக இந்தியா முழுமைக்கும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, இந்நிலையில் தமிழக அரசும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்குட்பட்டு பல்வேறு நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுற்பட்டது இருப்பினும் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டங்களால், ஏழை விவசாயக்கூலிகள்,கட்டிட தொழிலாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் உங்கள் உத்தரவை மதித்து வீட்டில் இருந்து இன்றளவும் வறுமையில் காலம் கடத்தி வருகிறார்கள் மக்களின் வறுமையை போக்க திட்டம் எடுக்காமல் மக்களை கொரோனாவை சொல்லி அச்சப்படுத்தி பதட்டத்துடன் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர் தொடர்ந்து

இந்நிலையில் மே 7-ம் தேதி முதல் மதுபானக்கடை (டாஸ்மாக்) திறந்து மேலும் ஏழை எளிய மக்களை வறுமையில் தள்ளி,பெரும்சிரமத்தை ஏற்படுத்தி அரசின் கஜானாவை நிரப்ப முடிவு செய்துள்ளீர்கள். நியாயம் தானா.?

அரசே.!

இந்த முடிவினை மறுபரிசீலனை செய்து மதுபானக்கடைகளை திறப்பதை நிறுத்தி வைக்க வேண்டுமாய் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். என க.வீ.மணிமாறன். மாநில துணைத்தலைவர். வெல்ஃபேர் கட்சி. தமிழ்நாடு கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..