கலசபாக்கம் தொகுதியில் தொழிலாளர்களுக்கு  சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் நிவாரணம் வழங்கினார்..

கலசபாக்கம் தொகுதியில் தொழிலாளர்களுக்கு  சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் நிவாரணம் வழங்கினார்..

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கலசபாக்கம் தொகுதியில் தொழிலாளர்களுக்கு நிவாரணம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார்.
கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஆட்டோ டிரைவர்கள், நெசவாளர்கள், மற்றும் இலங்கை அகதிகளுக்கு அரிசி மளிகைபொருட்கள் காய்கறி மற்றும் நெத்திலி கருவாடு தொகுப்பு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
கலசப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட தென் பள்ளிப்பட்டு அகதிமுகாம் கிராம சேவை கட்டிடம் அருகில் மேல்வில்வராயநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,கடலாடி உயர்நிலைப் பள்ளி வளாகம், புதுப்பாளையம் கரைகண்டேசுவரர் கோயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வீட்டு வசதி சங்க துணை தலைவர் பொய்யாமொழி, தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம், வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் மண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்