‘கொரோனா’ அச்சத்தால் சமூக இடைவெளியுடன் கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு…

விருதுநகர் மாவட்டம், வத்றாயிருப்பு தாலுகா, எஸ்.ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த குருசாமி, ஆவுடைபார்வதி தம்பதிகளின் மகன் செல்வக்குமார் (29), க்கும் இராஜபாளையத்தை ஊரைச்சேர்ந்த முத்துகற்பகம் (23) இருவருக்கும் ஓராண்டு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் செல்வகுமார் மற்றும் முத்து கற்பகத்துடன் கணவரின் தயார் இருந்து வந்த நிலையில் ஏழு மாத கர்ப்பிணியான முத்துகற்பகத்திற்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, உறவினர்களை அழைக்காமல் வீட்டிலிருந்த பெரியவர்கள் முன்னிலையில், வளைகாப்பு நிகழ்ச்சி, சமூக இடைவெளியுடன் எளிமையாக நடந்தது. நிகழ்ச்சியில் இரு குடும்பத்தைச் சேர்ந்தவள் மட்டும் கலந்து கொண்டனர். இது குறித்து வளைகாப்பு தம்பதிகள் கூறும் போது, “வளைகாப்பு நிகழ்ச்சியில் உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்ளமுடியாதது வருத்தமாக உள்ளது. இருந்தாலும் சமூக இடைவெளியுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்கள். மேலும் பெண்ணின் தயார் மற்றும் உறவினர்கள் என யாரும் கலந்து கொள்ள முடியவில்லை ஏனென்றால் பஸ் போக்கு வரத்து தடை இருந்ததால் என் வீட்டின் சார்பாக கலந்து கொள்ள முடியவில்லை” என்று மன வேதனையுடன் கூறும் கர்ப்பிணி பெண் கற்பகம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..