எரிகிற வீட்டில் கொள்ளி எடுக்கும் கூட்டம்… ஏர்வாடி தர்ஹாவில் மக்கள் ஏமாற்றபட்டார்களா..??.. பெண்கள் வாக்குமூலம்.. வீடியோ செய்தி…

கொரோனோ வைரஸால் உலகம் முழுவதும் ஜாதி, மதம் என்ற எல்லையை தாண்டி அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதே போல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள் முதல் சமூக நல அமைப்புகள் வரை தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த கடுமையான காலகட்டத்திலும் எரிகிற வீட்டில் கொள்ளி எடுப்பது போல், பாதிக்கப்பட்ட மக்களை வைத்து ஒரு கூட்டம் காசு சம்பாதிக்க முயற்சித்துள்ளது என்பதை அறியும் போது அதிர்ச்சி அளிக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில்  ஏர்வாடி தர்ஹாவில் உள்ள சில குடும்பங்கள் சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் பட்டினி கிடப்பதாகவும் ஏர்வாடியில்  உதவ யாருமில்லை என ஒரு வீடியோ உலா வந்தது.  ஆனால்  அது முற்றிலும் தவறு ஏர்வாடி தர்ஹா வில் உள்ள பல உதவும் குழுக்கள் பல முறை பொருட்களாகவும் மற்றும் பணமாகவும் உதவி செய்திருக்கின்றனர்.

மேலும் மூன்று வேலை உணவும் கொடுக்கப்படுகின்றது. வெளியூரில் இருந்து உதவி செய்கிறோம் என்று வந்த கும்பல் ஒன்று அங்கே இருந்தவர்களை ஏமாற்றி பேசவைத்து அதை வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளங்களில் ஏற்றி அதிலே பேசியவர்களின் பேங்க் அக்கவுண்ட் நம்பரை போடாமல் தங்களுடைய அக்கவுண்ட் நம்பரை  போட்டு பணம் சம்பாதித்துள்ளனர், ஆகவே யாரும் அந்த அக்கவுண்டில் பணம் போட வேண்டாம் ஏர்வாடியில் உள்ள அம்மக்களே கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

மனிதா மனித நேயம் எங்கே?? மரித்து விட்டதா?

புனித ரமலான் வாழ்த்துக்கள்..