கன்னியாகுமரி அருகே இளைஞர் கத்தியால் குத்திக் கொலை: உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு!

கன்னியாகுமரி அருகே இளைஞர் கத்தியால் குத்திக் கொலை: உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு!

கன்னியாகுமரி எறும்புகாடு பகுதியில் வசித்து வரும் குணசேகர் என்பவரின் மகன் வினோத் நேற்று இரவு வினோத்தை அவர் நண்பர் போன் செய்து அழைத்துள்ளார். உடனே வெளியே சென்ற வினோத்தை நண்பர்களுடன் வந்த மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியில் குத்தியுள்ளனர். வினோத்தின் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியில் சென்று பார்த்த குணசேகரன் அதிர்ச்சி அடைந்தார் கத்தியால் குத்தப்பட்டு இரத்தம் வடிய கதறுகின்ற மகனின் குரலை கேட்டு வினோத்தின் தந்தை குணசேகர் கத்தி கதறி அழுதுள்ளார்.உடனே தனது மகன் வினோத்தை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு தனது ஆட்டோவில் தூக்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அதன்பின்பு ஆதிக்க சாதியின் தூண்டுதலின் பேரில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் குணசேகர் உன்னை விசாரிக்க வேண்டும் என்று காவல்நிலைத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் குணசேகரின் மைதுனர் காவல்நிலையம் சென்று குணசேகரை அனுப்பி வையுங்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்க்கு தந்தையின் கைய்யொப்பம் வேண்டும் என சொல்லுகிறார்கள், குணசேகரை அனுப்புங்கள் என கெஞ்சி கேட்டுள்ளார்.உடனே காவல்நிலையைத்தை விட்டு வெளியே வந்தவுடன் குணசேகர் செல்போனுக்கு வினோத் இறந்துவிட்டார் என்ற தகவல் மருத்துவமனையிலிலருந்து தெரிவிக்கப்பட்டது.

குணசேகரை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லாமல் இருந்திருந்தால் வினோத்தை காப்பாற்றியிருக்கலாம் என வினோத்தின் தந்தை குணசேகரன் காவல்துறை மீது குற்றம் சாட்டியுள்ளார்.

வினோத்தின் சாவிற்கு காரணம் சில சாதி வெறியர்களும், ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய அதிகாரிகளும் தான் காரணம் எனவே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் வரை வினோத்தின் சடலத்தை பெறமாட்டோம் என்று வினோத்தின் உறவினர்களும், திராவிடத்தமிழர் கட்சியினரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து உடலை வாங்க மறுத்துள்ளனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..