விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழக அமைச்சர் பல தரப்பினருக்கு பொருள் வழங்கல்..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவ திருச்சபை ஊழியர்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 10 கிலோ வீதம் 2 ஆயிரம் பேருக்கு அரிசிப் பைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ இன்று உலக பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

தமிழகம் முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிகப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் சில நிபந்தனைகளுடன் அறிவித்துள்ளார் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்

நியாயவிலைக் கடைகள் மூலமாக அனைத்து பொது மக்களுக்கும் நிவாரண பொருட்கள் சென்று கொண்டுள்ளது“  என்றும் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்