Home செய்திகள் வெளியூரிலிருந்து வந்த111 பேர் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

வெளியூரிலிருந்து வந்த111 பேர் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

by Askar

வெளியூரிலிருந்து வந்த 111 பேர் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் வெளியூரிலிருந்து வந்த 111 பேர் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

செங்கம் தாலுக்காவில் பல்வேறு கிராமங்களிலிருந்து வெளியூர்களில் வேலை செய்தவர்கள் நேற்று முன்தினம் இரவு செங்கத்துக்கு வந்தனர். ஆட்டோ மற்றும் வேன்களிலிருந்து ஆந்திராவிலிருந்தும் சென்னை திருப்பூர் நகரங்களிலிருந்தும் வந்தனர். இவர்கள் போலீசாரால் செங்கம் அடுத்த ஆனந்தவாடி சோதனைச் சாவடியிலிருந்தும் போளூர் அருகிலேயும் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியூரிலிருந்து அரசுக்கு தெரியாமல் வருவது அறியப்பட்டது. இந்த தகவல் உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் செங்கம் நகருக்கு வந்தார். வெளியூரிலிருந்து வந்த 111 பேர் செங்கம் பழைய பேருந்து நிலையம் எதிரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு பாய் தலையணை போர்வை மற்றும் அத்தியாவசிய பொருட்களை தாசில்தார் பார்த்தசாரதி வழங்கினார். டிஎஸ்பி சின்ராஜ் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் உரிய நிவாரணம் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். மேல்பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதில் யாருக்காவது கொரோனா நோய் தொற்று இருக்கிறதா என்பது கண்டறியப்படும் வரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!