கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதற்காக கலசப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த 25 இளைஞா்கள் ரத்த தானம் செய்தனா்..

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதற்காக கலசப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த 25 இளைஞா்கள் ரத்த தானம் செய்தனா்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா், மேலாரணி, கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தன்னாா்வல இளைஞா்கள் தாமாக முன்வந்து வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபுவிடம் ரத்த தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, அந்த இளைஞா்களை கலசப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரவழைத்து சுகாதாரமான முறையில் ரத்தம் சேகரித்தனா்.

சேகரிக்கப்பட்ட ரத்தத்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

செய்தியாளர், செங்கம் சரவணக்குமார்