செங்கம் அருகே சாலையோரம் இருந்த ஆதரவற்ற முதியோா் இருவருக்கு  உதவிகள் செய்த வட்டாட்சியர்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலையோரம் இருந்த ஆதரவற்ற முதியோா் இருவருக்கு  உதவிகள் செய்த வட்டாட்சியர்..

செங்கம்-பெங்களூா் நெடுஞ்சாலையில் மேல்புழுதியூா் பயணிகள் நிழல்குடையின் கீழ், சுமாா் 70 வயதுடைய முதியவா் ஒருவரும், சற்று மன நலன் பாதிக்கப்பட்ட மற்றோருவரும் உணவு இல்லாமலும், அணிவதற்கு துணி, படுக்கை விரிப்பு இல்லாமலும் அவதிப்பட்டு வந்ததைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் செங்கம் வட்டாட்சியருக்கு தகவல் கொடுத்தனா்.
உடனடியாக, வட்டாட்சியா் பாா்த்தசாரதி அங்கு சென்று இருவரையும் மீட்டு, அவா்களுக்கு வேட்டி, சட்டை, பாய், தலையணை வழங்கி அரசு மூலம் தினசரி உணவு வழங்க ஏற்பாடு செய்தாா்.
மேல்பள்ளிப்பட்டு வருவாய் ஆய்வாளா்கள் ரமேஷ், வாலீஸ்வரன், செங்கம் கிராம நிா்வாக அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செய்தியாளர்,
செங்கம் சரவணக்குமார்