Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் முழுமையான ஊரடங்கு-சமூக விலகலை கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள்…

தென்காசி மாவட்டத்தில் முழுமையான ஊரடங்கு-சமூக விலகலை கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள்…

by Askar

தென்காசி மாவட்டத்தில் முழுமையான ஊரடங்கு-சமூக விலகலை கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள்…

தென்காசி மாவட்டத்தில் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் எதிர்வரும் 03.05.2020 ஞாயிறு அன்று கடைகளை அடைத்தும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் 100% சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலினை முற்றிலும் தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி பேரூராட்சி வார்டுகளில் மத்திய மற்றும் மாநில அரசு பிறப்பித்துள்ள 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவினை பின்பற்றும் வகையில் பல்வேறு உத்திகளை கையாண்டு போர்க்கால அடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சமூக இடைவெளியை மையமாக வைத்து பொதுமக்கள் அதிகமாக கூட்டம் கூடுவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு அன்றாட அத்தியாவசியமாக தேவைப்படும் மளிகைப் பொருட்களை வீடு தேடி வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் உழவர் சந்தைகள் மற்றும் நகராட்சி தினசரி காய்கறி சந்தைகளையும் பரவலாக அமைத்தும்,அம்மா உணவகம்,இறைச்சி கடைகள் ஆகியவற்றில் சமூக விலகலை பின்பற்றவும் வருவாய்த்துறை, காவல்துறை,உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் சமூக விலகலை பின்பற்றும் விதமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக நகராட்சியில் 3 விதமான வர்ண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

1.இளஞ்சிவப்பு வர்ண அட்டையின் படி திங்கள்,வியாழன்,

2. நீல வர்ண அட்டையின் படி செவ்வாய்,வெள்ளி,

3. பச்சை வர்ண அட்டையின் படி புதன், சனி ஆகிய கிழமைகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றை தடுக்க அனைத்து நகராட்சி பேரூராட்சி பகுதிகளிலும் சமூக விலகலை 100% பொது மக்கள் கடைபிடிக்கும் பொருட்டு எதிர்வரும் 03.05.2020 ஞாயிறு அன்று அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படும்.இறைச்சி கடைகள் மட்டும் காலை 6.00 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும். வரும் ஞாயிறு அன்று பொதுமக்கள் மருத்துவ தேவைகள் நீங்கலாக வீட்டை விட்டு வெளியேறாமல் 100% சமூக இடைவெளியை கடைபிடிக்க அனைவரும் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!