ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் நோன்பு கஞ்சிக்காக அரசு வழங்கிய அரிசியை பயனாளிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது..

ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் நோன்பு கஞ்சிக்காக அரசு வழங்கிய அரிசியை பயனாளிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது..

ரமலான் நோன்பு காலத்தில் தமிழக அரசு நோன்பு நோர்க்கும் முஸ்லீம் மக்களுக்கு பள்ளி வாசல்களில் கஞ்சி காய்ச்சுவதற்காக அரிசி வழங்கி வருகிறது. அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சியில் உள்ள ஒரு பகுதிக்கு 4500 கிலோஅரிசி வழங்கி உள்ளது. தற்போது நாட்டில் கொரோனா நோய்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அரசு மக்கள் நலன்கருதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகவே, கஞ்சி காய்ச்சி நோன்பு நோர்ப்பவர்களுக்கு வழங்கமுடியாத சூழல் நிலவுவதால் தமிழக அரசால் வழங்கப்பட்ட அரிசியை அரசு விதிமுறைக்குட்பட்டும், ஆத்தூர் வட்டாட்சியர் அரவிந்த் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், பள்ளிவாசல் முத்தவல்லிகள் உதுமான்அலி, ஷேக்தாவூத் தலைமையில் அதிமுக நகரசெயலாளர் அக்பர் அலி, ஆத்தூர் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் முகமது ஹாஜியார்,வார்டு செயலாளர் முகமது அலிஜின்னா,அபுதாகிர் ஆகியோர் முன்னிலையில் பயனாளிகளை கண்டறிந்து வீடு வீடாகச் சென்று  பிரித்து வழங்கப்பட்டது.

திண்டுக்கல், பக்ருதீன்