தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிவாரணம்..

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிவாரணம்..

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே,எஸ், அழகிரி  கேட்டுக்கொண்டதின் பேரில் கொரானா ஊரடங்கு நேரத்தில் ஏழை,எளிய நாட்டுப்புற கலைஞர்களான தவில், நாதஸ்வரம் மற்றும் நாடக கலைஞர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மேற்கு மாவட்டத்தின் சார்பாக அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது . இதில் மூத்த வழக்கறிஞர். நோட்டரி அட்வகேட்,R.குப்புசாமியின் சார்பாக 600 கிலோ அரிசி மற்றும் முகம்மது சித்திக்  சார்பாக ரூ,15000 ம் மதிப்புள்ள மளிகை, காய்கறிகள் , நாட்டுப்புற கலைஞர்களுக்கும், ஏழை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது . இவர்கள் அருகில் உள்ள அம்பிளிக்கை , கள்ளிமந்தையம் , ஓடபட்டி, தேவத்தூர். தங்கச்சியம்மா பட்டி, மந்தவாடி சமயபுரம் சிந்தலைபட்டி, சத்திரபட்டி, மற்றும் ஆயக்குடி வாழ் கலைஞர்கள் ஆவார்கள் . இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள் முக கவசங்களுடன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் திண்டுக்கல் பகுதி மக்களுக்கு பலஉதவிகள் செய்துவரும் மூத்தவழக்கறிஞர் மற்றும் மாநில PCC செயற்குழு உறுப்பினர் . நோட்டரி அட்வகேட் .R.குப்புசாமியின் சேவைகளை பொதுமக்கள் மற்றும் நாட்டுப்புற நிகழ்த்தும் கலைஞர்கள் வெகுவாக பாராட்டினார்கள் . விழாவில் கொரானா ஊரடங்கு நேரத்தில் நிதியுதவி , பொருளுதவி கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது .